மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மஹா புயல், புல்புல் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.

rain

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நேற்று முன்தினம்  கன மழை பெய்தது. சென்னையின் பிரதான இடங்களில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலைக்குச் செல்லும் மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கினர்.

rain

இந்நிலையில்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை,ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.