மூன்று தொகுதி  மக்களுடன் மோதும் அமைச்சர்!

 

மூன்று தொகுதி  மக்களுடன் மோதும் அமைச்சர்!

நாகை மாவட்டத்தில்  மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தும் அது எங்கே அமையப்போகிறது என்பதில் இழுபறி நடக்கிறது. ஒரு பக்கம் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதி மக்கள்,மறுபுறம் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்.

maniyan

அமைச்சர் அந்த மருத்துவக்கல்லூரி தன்  வீட்டருகே அமைய வேண்டும் என்று ஒரகதூருக்கு கொண்டுபோகப் பார்க்கிறார்.ஒரகத்தூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள திருவாரூரில் ஏற்கனவே மருத்துவக்கல்லூரி இருக்கிறது. ஆனாலும், பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி தொகுதி மக்களுக்கோ ஒரகத்தூர் வரவேண்டும் என்றால் 65 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.அந்தப் பகுதி சாலைகளில் இந்த தூரத்தைக் கடக்க  குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும் அதனால் மருத்துவ கல்லூரி மயிலாடுதுறையில் அமைய வேண்டும் என்கிறார்கள்.

maniyan

இந்த நிலையில் ஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று சமீபத்தில் நடந்த உள்ளூர் விழாவில் முழங்கி இருப்பது, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.ஏற்கனவே மயிலாடுதுறையைத் தனிமாவட்டம் ஆக்க வேண்டும் என்று இந்த மூன்று தொகுதி மக்களும் கடை அடைப்பெல்லாம் நடத்திப் போராடிக்கொண்டு இருக்கும் நேரத்தில், இவர் ஏன் மக்களை சீண்டுகிறாரார் என்று உள்ளாட்சித் தேர்தலை நினைத்து ரத்தத்தின் ரத்தங்களே பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

என்ன மிஸ்ட்டர் ஓ.எஸ் மணியன்,நீங்களே மக்களின் விருப்பத்துக்கு இப்படி நோ…நோ சொல்லலாமா?.