மூன்று தலைநகர் அறிவிப்பை போகி நெருப்பில் போட்டு பொசுக்கிய சந்திரபாபு நாயுடு!

 

மூன்று தலைநகர் அறிவிப்பை போகி நெருப்பில் போட்டு பொசுக்கிய சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி மட்டுமின்றி மொத்தம் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஜெகன் மோகன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போகி பண்டிகையின்போது அறிவிப்பை எரிக்கும் போராட்டம் நடந்தது.

ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி மட்டுமின்றி மொத்தம் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஜெகன் மோகன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போகி பண்டிகையின்போது அறிவிப்பை எரிக்கும் போராட்டம் நடந்தது.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனியாக பிரிக்கப்பட்டதால் ஹைதராபாத் தெலங்கானாவுக்கு சொந்தமானது. இதனால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்தது. புதிய தலைநகர் அமராவதியை உருவாக்கும் வேலையை அப்போதை முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டார். ஆனால், ஆட்சி மாறியதால் தலைநகரம் அமைப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அரசின் இந்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். 

chandrababu-naidu-01

இந்த நிலையில் விஜயவாடாவில் இன்று அதிகாலை போகி பண்டிகையையொட்டி அரசின் அறிவிப்பை எரிக்கும் போராட்டத்தை சந்திரபாபு நாயுடு நடத்தினார். இதில், ஏராளமான தெலுங்கு தேசம் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். 
பின்னர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “மூன்று தலைநகர் திட்டத்தை ஜெகன்மோகன் கைவிட வேண்டும். இல்லை என்றால் இந்த அரசை கலைத்துவிட்டு மக்களைச் சந்தித்து மீண்டும் வெற்றி பெற வேண்டும். மக்கள் ஜெகன் மோகன் திட்டத்துக்கு ஆதரவு அளித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன். 

chandrababu-naidu-02

அமராவதி வேண்டாம் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் கூறுகின்றனர். ஆனால், அமராவதி வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது. விசாகபட்டினம் வளர்ச்சி பெற வேண்டும். அதற்காக அங்கு மூன்று அரசு நிறுவனங்களை அமைத்தால் வளர்ச்சி பெற்றுவிடாது. வட ஆந்திரத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றாலே அந்த பகுதி வளர்ச்சி பெறும்.
மூன்று தலைநகர் என்பது பைத்தியக்காரத்தனம் என்று ஜெகன் மோகன் அமைச்சர் ஒருவர் கூறுகிறார். மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் ஒருவரைக் கூட காண முடியவில்லை. கோழிச்சண்டை, மாட்டுவண்டி ஓட்டுவதில் அமைச்சர்கள் பிசியாக உள்ளனர். அமராவதி போராட்டத்திற்கு போலீசாரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.