மூன்று ஆடுகளும் சில மனித உயிர்களும்! பதற வைக்கும் வைரல் வீடியோ

மூன்று ஆடுகளும் சில மனித உயிர்களும்! பதற வைக்கும் வைரல் வீடியோ

நான்கு, ஆறு வழிச் சாலைகளில் கண்ட இடங்களில் எல்லாம் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை விளக்கும் சிசிடிவி கேமரா வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்படுகிறது. வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் வாகனங்கள் மீது வீசப்படும் கருப்பு மை, பெயிண்ட் போன்ற கதையாக இருக்கும் என்று முதலில் அதை புறக்கணிக்க தோன்றியது. 

sheep

சரி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்த்தோம். நெடுஞ்சாலை ஒன்றில், மூன்று ஆடுகள் சாலையை கடக்க முயற்சிக்கின்றன. அப்போது ஒரு ஆடு கடந்துவிட்டது. மற்றொரு ஆட்டின் மீது கார் மோதியது. லேசான அடிதான், ஆடு எழுந்து ஓடிவிட்டது. ஆட்டின் மீது இடிப்பதை தடுக்க காரை சடர்ன் பிரேக் போட்டதால் பின்னால் வந்த இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன.

உடனே, காரில் இருந்தவர்கள் எவ்வளவு சேதம் என்பதைக் காண கீழே இறங்கினர். ஒவ்வொரு காரில் இருந்தும் ஆட்கள் இறங்கி சேதத்தை பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு உதவ என்ன ஆச்சு என்று கேட்க கூட யாரும் காரை நிறுத்தவில்லை. அவரவர் தங்களுக்கு கிடைத்த வழியில் நுழைந்து வேகமாக காரை செலுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காருக்கும் தடுப்புக்கும் இடையே இருந்த இடைவெளியில் ஒரு டிரக் பாய்ந்தது. இதனால், காரில் எவ்வளவு சேதம் என்று பார்த்த சிலர் டிரக்கில் அடிப்பட்டு வீசப்படுகின்றனர். பார்க்கவே கோரமாக இருந்தது வீடியோ!
இந்த சம்பவம் எங்கே எப்போது நிகழ்ந்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. இணையத்தில் இது தொடர்பாக தேடிய போது பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவது தெரிந்தது. அதில், இந்த சம்பவம் 2018ம் ஆண்டு சீனாவில் நடந்ததாகவும், விபத்தில் யாரும் உயிர் தப்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆட்டுக்கும் உயிர் உள்ளது அதை மதிக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் யாருக்குமே நேரமில்லாதது போல அவசர அவசரமாக வாகனத்தை அதிவேகத்தில் இயக்கும் இடத்தில் ஆட்டின் மீது பரிதாபம் கொண்டு வாகனத்தை நிறுத்தியது வரை சரி… அதன் பிறகு அந்த இடத்தில் நின்றிருக்க வேண்டாம். விபத்து நிகழ்ந்துவிட்டது, சற்று பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தி என்ன ஏது என்று பார்த்திருக்கலாம். காரில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்று சிலர் உயிரிழந்தது பலருக்கு பாடமாக அமைந்துவிட்டது. காருக்கு ஏற்பட்ட சேதத்தை விட மனித உயிர் மதிப்பானது என்று இந்த வீடியோவைப் பார்க்கும்போதாவது மக்கள் உணர்வார்களா?