மூன்றாவது முறையாக நானியுடன் கூட்டணி அமைத்த பிரபல விஜய் பட நடிகை 

 

 மூன்றாவது முறையாக நானியுடன் கூட்டணி அமைத்த பிரபல விஜய் பட நடிகை 

நடிகர் நானியுடன் மறுபடியும் கூட்டணி சேர்ந்துள்ளர் பிரபல நடிகை ‘நிவேதா தாமஸ்’. 

சென்னை: நடிகர் நானியுடன் மறுபடியும் கூட்டணி சேர்ந்துள்ளர் பிரபல நடிகை ‘நிவேதா தாமஸ்’. 

தமிழில் விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் தங்கையாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். அதைத்தொடர்ந்து இவர் கமலின் பாபநாசம், போராளி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் நடித்து, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பவராக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 

இந்நிலையில்,பல வெற்றி படங்களை கொடுத்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ‘நானி’. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஜெர்ஸி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

nivetha

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நானி நடித்து வரும் 25ஆவது படத்தை இயக்குநர் மோகன கிருஷ்ணா இயக்கி வருகிறார். ‘வி’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால் இதில் மற்றொரு நாயகியாக நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

இவர் ஏற்கனவே நானியுடன் சேர்ந்து நின்னுக் கோரி, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்துத்திருப்பது குறிப்பிடத்தக்கது.