மூன்றாவது காலாண்டில் ரூ.831 கோடி வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

 

மூன்றாவது காலாண்டில் ரூ.831 கோடி வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்றாவது காலாண்டில் மொத்தம் ரூ.831 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்றாவது காலாண்டில் மொத்தம் ரூ.831 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் அந்நிறுவனம் சுமார் ரூ.831 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 12.4 சதவிகிதம் அதிகமாகும். மேலும், டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் 2.8 வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 28.01 கோடியை கடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதவிர இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்கள் புள்ளி விவரங்களில் இருந்து கிடைத்துள்ளது. அதாவது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மாதம் ஒன்றிற்கு ஒரேயொரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் சராசரி வருவாய் ரூ.130 ஆகும். அதேபோல ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ்கால் பயன்பாடு தினமும் 63,406 கோடி நிமிடங்கள் ஆகும். சராசரியாக ஒரு ஜியோ வாடிக்கையாளர் மாதம் ஒன்றிற்கு 10.8 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறார்.