மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் சந்திரசேகர ராவ் மோடியுடன் ஆலோசனை!

 

மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் சந்திரசேகர ராவ் மோடியுடன் ஆலோசனை!

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டி வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

புதுடெல்லி: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டி வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். 

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே கூட்டணியாக செயல்பட்டால் தான் ஜனநாயகப் பூர்வமான ஒரு பிரதமரை இந்தியா பெற முடியும் என்பதே அரசியல் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது. 

statue

இதற்காக தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஒரு அணியை உருவாக்கிட ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதன்மூலம், பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது. 

இதற்கிடையே, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் விதமாக, பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதன் நீட்சியாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு வேளை, சந்திரசேகர் ராவின் முயற்சி மெய்யாகும் பட்சத்தில், அது தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ அமைத்த மக்கள் நலக் கூட்டணிக்கு சற்றும் சளைக்காத கூட்டணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

modi

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்து சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தெலங்கானா மாநில விவகாரங்கள் தொடர்பாக மோடியுடன் ஆலோசனை நடத்தவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் சந்திரசேகர் ராவ்வின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.