மூனரை அடி இலை.இருபதுக்கு மேற்பட்ட நான் வெஜ்  ஐட்டங்கள்… வரவேற்கும் வாழல்பாடி பாப்- அப் தமிழச்சி உணவகம்

மூனரை அடி இலை.இருபதுக்கு மேற்பட்ட நான் வெஜ்  ஐட்டங்கள்… வரவேற்கும் வாழல்பாடி பாப்- அப் தமிழச்சி உணவகம்

சேலம் ஆத்தூர் பைப்பாஸ் சாலையில் முத்தம்பட்டி என்கிற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த விலாசமான உணவகம். சுற்றிலும் ஒரு சிறிய பார்க் போல அமைப்பு.உள்ளே போனால் பலவிதமான பறவைகள்,குழந்தைகளு பலூன் சுட ஒரு மூலையில் ஏற்பாடு.அவர்கள் போடுகிற இலையை மனதில் வைத்துச் செய்யப்பட்ட பெரிய வசதியான மேஜை நாற்காலிகள்.
உயரமான கீற்றுக்கூரை வெப்பத்தை விரட்டுகிறது

இந்தப் நெஸ்ட் ஜெனரேஷன் உணவகத்தை நடத்துபவர் சிலம்பரசன் என்கிற இளைஞர்.கேட்டரிங் படித்துவிட்டு சென்னையில் ஒரு உறவினரின் ஹோட்டலில் இரண்டாண்டுகள் வேலை பார்த்திருக்கிறார்.அடுத்த கட்டமாக,சொந்த ஊரிலேயே இந்த உணவகத்தை தொடங்கி விட்டார்.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப் பட்டாலும் அவரது கறி விருந்து ஐடியா கிளிக்காகி விட்டது.

pop up

பாப் – அப் தமிழச்சி கறிவிருந்து ஒருவருக்கு 490 கட்டணம்.அதற்கு இருபதுக்கும் மேற்பட்ட அசைவ ஐட்டங்கள் தருகிறார்கள்.அந்தப்
பட்டியலைப் பாருங்கள்,வாயூறும்.

முதலில் உங்கள் முன்னால் மூன்றரை அடி நீளமுள்ள ,இதற்காகவே திருவண்ணாமலை பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட இலை போடப்படும். அதில் முதலில் நாட்டுச் சர்க்கரை பொங்கல் வந்து அமரும் பின்னாலேயே ரத்தப் பொரியல், தலைக்கறி,முட்டைத் தொக்கு,மட்டன் சுக்கா,நாட்டுக் கோழி சுக்கா,இஞ்சிகாரக்கறி,காடை,மூளை,இறால் தொக்கு,வெங்காய ரயித்தா,போட்டி,சீராகச் சம்பா மட்டன் பிரியாணி,சிக்கன் லாலி பாப்-2,மீன் வறுவல்,சிக்கன் போன்லெஸ் என்று வரிசைகட்டி வருகின்றன.

pop up

நான் ரத்தப் பொரியல் சாப்பிட மாட்டேன்,குடல் குழம்பு வேண்டாம் என்றாலும் விடுவதில்லை,சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள் என்று அள்ளி வைக்கிறார்கள்.இவற்றுடன் தொடு கறிபோல சோறும் தருகிறார்கள். அந்தச் சோற்றுக்கு எலும்புச்சாறு,ரசம்,மோர்,தயிர் எல்லாம் உண்டு.
முடித்தபின் , குல்கந்து சேர்த்த இனிப்பு பீடாவும்,நன்னாரி சர்பத்தும் வருகிறது.

புதிதாக திருமணமான ஜோடி வந்தால் இருவருக்கும் ஒரே இலையில் பரிமாறி ரொமான்ஸ் செய்கிறார்கள்.ஏதாவது ஒரு ஐட்டம் ரொம்பப் பிடித்துப் போனால் கூச்சப்படாமல் மறுபடிக் கேட்டாலும் தருகிறார்கள்.

pop up

இங்கு தலைமை சமையல்காரர் சிலம்பரசன் தான்.எல்லா மசாக்களும் இங்கேயே தயாரிக்கப் படுவதால் வயிற்றுக்குப் பாதிப்பில்லை என்கிறார்.
ஒரே ஒரு கண்டிஷன் இருக்கிறது. கறி விருந்து ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே தயாரிக்க முடிகிறது. என்பதால் முன்பதிவு அவசியம்.