மூட்டு வலி தைலம் என்று விற்பனையாகும் சயனைடு எண்ணெய்! – கொடைக்கானலில் நடக்கும் விபரீத வியாபாரம்

 

மூட்டு வலி தைலம் என்று விற்பனையாகும் சயனைடு எண்ணெய்! – கொடைக்கானலில் நடக்கும் விபரீத வியாபாரம்

கொடைக்கானலில் மூட்டு, முதுகு வலிக்கு தைலம் என்று கூறி சயனைடு விற்பனை நடந்து வருவதாகவும், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கொடைக்கானலில் மூட்டு, முதுகு வலிக்கு தைலம் என்று கூறி சயனைடு விற்பனை நடந்து வருவதாகவும், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

kodikanal

இயற்கை அழகை ரசிக்க ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்கிறோம். அங்கே முக்கியமான சுற்றுலா தளங்களில் இயற்கை அழகை அடைத்தபடி நிறைய கடைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த கடைகளில் கொடைக்கானல் சாக்லெட், தைலம் என்று நிறைய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மூட்டு வலி, முதுகுவலி இல்லாத நபர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாட்டில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கொடைக்கானலில் தயாரிக்கப்படும் மூலிகை தைலம் என்று நினைத்து இந்த தைலங்களை பலரும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

shop

குறிப்பாக மூட்டு வலிக்கு என்று விற்பனையாகும் விண்டர் கிரீன் தைலத்தைத் தெரிந்தும் சாப்பிட்டு தற்கொலை செய்தவர்களும், தெரியாமல் வாயில் பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்கின்றனர் கொடைக்கானல் வாசிகள்.
இந்த விண்டர் கிரீன் தைலத்தை மெத்தில் சாலிசிலேட் என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தி தயாரிப்பதாக கொடைக்கானல் மக்கள் கூறுகின்றனர். இது சயனைடு வகையைச் சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். இரு டீஸ்பூன் மெத்தில் சாலிசிலேட் என்பது 20க்கும் மேற்பட்ட 300 எம்.ஜி அளவு ஆஸ்பிரின் மாத்திரைக்கு சமமாம். உடலில் தடவும்போது வலி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

oil

தொடர்ந்து இதை பயன்படுத்தினால் தசைகள் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர். கொடைக்கானலில் தற்கொலை செய்துகொண்ட பலரும் விண்டர் கிரீன் ஆயிலை குடித்துள்ளனர். அப்படி இருந்தும் இந்த விண்டர் கிரீன் ஆயில் விற்பனையைத் தடுத்து நிறுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் தெரியாமல் இந்த ஆயிலை வாயில் வைத்தாலே பல பாதிப்புகள் ஏன் உயிரிழப்பு கூட நிகழலாம் என்று எச்சரிக்கின்றனர். இப்படிப்பட்ட விண்டர் கிரீன் ஆயிலை தயாரிக்க, விற்பனை செய்யத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்பது அதைப் பற்றி நன்கு தெரிந்த கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாக உள்ளது.