மூடாதீங்க…. மீறினால் நடவடிக்கை பாயும்… தனியார் மருத்துவமனைகளுக்கு உ.பி. அரசு எச்சரிக்கை…

 

மூடாதீங்க…. மீறினால் நடவடிக்கை பாயும்… தனியார் மருத்துவமனைகளுக்கு உ.பி. அரசு எச்சரிக்கை…

உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் சில பகுதிகளில் முடக்கத்தை மீறி பொதுமக்களில் சிலர் சுற்றி திரிகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் மேலும் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் சில தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அம்மாநில அரசுக்கு புகார் சென்றது. இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளது.

மருத்துவமனை

இது தொடர்பாக அம்மாநிலத்தின் தலைமை செயலர்  ஆர்.கே. திவாரி கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது அனைத்து வசதிகள் மற்றும் சேவைகளை தொடர வேண்டும். செய்ய தவறினால் அவர்கள நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். மாநிலத்தில் போதுமான மருத்துவ சேவைகளை உறுதி செய்ய இந்திய மருத்துவ சங்கத்தின் உதவி கேட்கப்படும் என தெரிவித்தார்.