மூடப்படுவதாக வரும் தகவல் வதந்திதான்….. ஏர் இந்தியா தொடர்ந்து பறக்கும்…. பயணிகளுக்கு கவலை வேண்டாம்

 

மூடப்படுவதாக வரும் தகவல் வதந்திதான்….. ஏர் இந்தியா தொடர்ந்து பறக்கும்…. பயணிகளுக்கு கவலை வேண்டாம்

ஏர் இந்தியா மூடப்படுவதாக வரும தகவல்கள் ஆதாரமற்றவை. ஏர் இந்தியா தொடர்ந்து பறக்கும். பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அந்நிறுவனத்தின தலைமை நிர்வாக இயக்குனர் அஸ்வானி லோஹனி தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுவரை ஏர் இந்தியா தொடர்ந்து செயல்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

அஸ்வானி லோஹனி

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், ஏர் இந்தியாவின் நிதி நிலவரம் தொடர்ந்து நிலையான செயல்பாட்டை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மத்திய அரசு உடனடியாக தலையீடுவதுடன், நாங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி கேட்கும் ஆதரவை அளித்தால் மட்டுமே விமான சேவையை தொடர்ந்து நடத்த முடியும் என விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் லோஹனி தெரிவித்து இருந்தார்.

ஏர் இந்தியா

இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா தொடர்ந்து பறக்கும் என லோஹனி டிவிட் செய்துள்ளார். அவர் டிவிட்டரில், ஏர் இந்தியா மூடப்படுவதாக அல்லது செயல்பாடுகளை நிறுத்த போவதாக வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. ஏர் இந்தியா தொடர்ந்து பறக்கும் மற்றும் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும். பயணிகள், நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் கிடையாது. தற்போது வரை, ஏர் இந்தியா நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் என பதிவு செய்துள்ளார்.