‘மூச்சுக்குழலில் சிக்கிய மூக்குத்தி திருகாணி ‘.. அறுவை சிகிச்சை செய்யாமல் அசால்டாக நீக்கிய அரசு மருத்துவர்கள் !

 

‘மூச்சுக்குழலில் சிக்கிய மூக்குத்தி திருகாணி ‘.. அறுவை சிகிச்சை செய்யாமல் அசால்டாக நீக்கிய அரசு மருத்துவர்கள் !

புஷ்பம்(55)  என்பவருக்குக் கடந்த ஒரு மாதமாக வறட்டு இரும்பலும், அடிக்கடி இரும்பும் போது வாயிலிருந்து ரத்தம் வருவதும் இருந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பம்(55)  என்பவருக்குக் கடந்த ஒரு மாதமாக வறட்டு இரும்பலும், அடிக்கடி இரும்பும் போது வாயிலிருந்து ரத்தம் வருவதும் இருந்துள்ளது. இதனால், உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்த புஷ்பம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் மூச்சுக் குழலில் திருகாணி ஒன்று சிக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பம், தனது மூக்குத்தியைச் சோதித்த போது அதில் திருகாணி இல்லாதது தெரியவந்துள்ளது. 

ttn

திருகாணி கழன்றும் அந்த மூக்குத்தி கீழே விழாததால் அதனைப் பற்றித் தெரியாமல் இருந்துள்ளார் புஷ்பம். அதன் பின்னர், அந்த மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை செய்யாமல் அகநோக்கி மூலம் அதனை நீக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும். ஆனால், அரசு மருத்துவர்கள் அதனை இலவசமாகச் செய்து முடித்துள்ளனர்.  

ttn

இன்னும் சிறிது காலம் அது தெரியாமல் இருந்திருந்தால் மிகவும் ஆபத்தாகியிருக்கும் என்றும் மருத்துவர்களின் சிகிச்சையால் புஷ்பம் தற்போது நலமாக இருப்பதாகவும் புதுவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். புஷ்பத்திற்குச் சிகிச்சை செய்த அந்த மருத்துவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.