மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி

 

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி

அமமுகவில் இருந்து விலகி  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். 

சென்னை: அமமுகவில் இருந்து விலகி  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். 

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

dmk

அதனடிப்படையில் அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார்.

mk stalin

இந்நிகழ்ச்சியின் போது திமுகவின் பொருளாளர் துரைமுருகன்,ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுகவை மாற்றியதில் கணிசமான பங்கு செந்தில் பாலாஜிக்கு உண்டு. அதனால் இனிவரும் காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுக செல்வாக்கு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.