மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர்: ஹெச்.ராஜா கடும் தாக்கு

 

மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாத தலைவர்: ஹெச்.ராஜா கடும் தாக்கு

மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக இருக்கிறார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக இருக்கிறார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் தான் அடுத்த பிரதமர் என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவரை முன்மொழிவதாகவும் பேசியிருந்தார்.

stalin

ஆனால், ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இருந்தே அதிருப்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக, அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற வடநாட்டு தலைவர்கள், ஸ்டாலினின் இந்த அறிவிப்பை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.

h raja

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பற்றி பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேச என்ன அவசியம் இருக்கிறது.

கடந்த 2 வருடங்களாக மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார்” என விமர்சித்துள்ளார்.

tamilisai

முன்னதாக, இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அவர்களின் கூட்டணி கட்சியினரே ரசிக்கவில்லை என்றும் ராகுலும் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்கின்றனர் என்றும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.