மு.க ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : நாளை நேரில் ஆஜராக உத்தரவு !

 

மு.க ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : நாளை நேரில் ஆஜராக உத்தரவு !

ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடக்கிறது, அதில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை ஆஜராகும் படி மு.க ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

ttn

இதனிடையே, நாளை நேரில் ஆஜர் ஆவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரியும் அமைச்சர் வேலுமணியின் ஊழலை மறைப்பதற்காகத் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.