மு.க ஸ்டாலின் பிறந்தநாளைத் தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட முடிவு !

 

மு.க ஸ்டாலின் பிறந்தநாளைத் தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட முடிவு !

வரும் மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள். அவரின் பிறந்த நாள் விழா அவரது குடும்பத்தினர் மத்தியிலும், திமுகவினர் மத்தியிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

வரும் மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள். அவரின் பிறந்த நாள் விழா அவரது குடும்பத்தினர் மத்தியிலும், திமுகவினர் மத்தியிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த முறை அவரது பிறந்தநாளை “தமிழர் எழுச்சி நாள்” விழாவாகக் கொண்டாட திமுக உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு திமுக எம்.எல்.ஏ சுப்ரமணியன் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்துள்ளார். 

 

இது குறித்து  திமுக எம்.எல்.ஏ சுப்ரமணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “கழக தலைவர் வணக்கத்திற்குரிய தளபதி அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்வுகள் சென்னை தெற்கில் “தமிழர் எழுச்சி நாள்”விழா நிகழ்ச்சிகளாக நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பிதழைக் கழகத் தலைவரிடத்தில் வழங்கி மகிழ்ந்தோம்” என்று பதிவிட்டு ஸ்டாலினுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.