மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பான பதில் அளிக்கவில்லை – கே.என்.நேரு

 

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பான பதில் அளிக்கவில்லை – கே.என்.நேரு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பான பதில் அளிக்கவில்லை என கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பான பதில் அளிக்கவில்லை என கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழகத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் கருவி எத்தனை வாங்கப்பட்டுள்ளது? ஒரு கருவியின் விலை என்ன? என்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திருந்தார். அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நாம் ரேபிட் கிட் வாங்கிய விலையை காட்டிலும் பக்கத்து மாநிலமான ஆந்திரப்பிரதசேம் அதிக விலை கொடுத்து ரேபிட் கிட்டை வாங்கியுள்ளது. ஆனால், அங்கே எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டவில்லை. ரேபிட் கிட்டை நாம் அதிக விலை கொடுத்து வாங்கவில்லை. ஆனால் இதை வைத்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என்றார்.

ttn

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பேரிடர் காலத்தில் கூட மக்கள் நலனில் அக்கறையில்லாமல் அதிமுக அரசு செயல்படுகிறது. மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள்,  மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருக்கிறதா என எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு அந்த துறையின் அமைச்சர் பொறுப்பான பதில் அளிக்கவில்லை. கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்” என கூறியுள்ளார்.