மு.க.ஸ்டாலின் உறுதியாக இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

 

மு.க.ஸ்டாலின் உறுதியாக இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரது இந்த பேச்சு பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்திருக்கும் எதிர்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் வேட்பாளர் குறித்து பேசவில்லை.

இந்நிலையில், கொல்கத்தாவில் கூடிய அனைத்து கட்சியினரும் புறக்கணிக்கப்பட வேண்டும். சென்னையில் பிரதமர் பதவிக்கு ராகுலை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின், கொல்கத்தா கூட்டத்தில் அதை சொல்லவில்லை. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை என்றார்.