மு.க.ஸ்டாலின்தான் சாடிஸ்ட்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

 

மு.க.ஸ்டாலின்தான் சாடிஸ்ட்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

ஸ்டாலினைவிட வேறு யார் சாடிஸ்ட்டாக இருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: ஸ்டாலினைவிட வேறு யார் சாடிஸ்ட்டாக இருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசும்போது பிரதமர் மோடி “சாடிஸ்ட்” போல் செயல்பட்டு வருகிறார் என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு இந்த இந்திய அளவில் விவாத பொருளானது. மேலும் ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜகவினர் தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி செய்த விஷயங்களை ஒப்பிட்டு ஸ்டாலின் செய்யப்போவதாக கூறினால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது ராகுல் காந்தியை அவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அப்படி காங்கிரஸ் கட்சி சொல்லச் சொன்னதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

‘சாடிஸ்ட்’ என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களை தேடிக் கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு ‘சாடிஸ்ட்’ என்று சொல்லலாமா? ‘சாடிஸ்ட்’ என்பது காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். ஸ்டாலினை விட ‘சாடிஸ்ட்’ வேறு யார் இருக்க முடியும் என்றார்.