மு.க.ஸ்டாலினை ஹீரோவாகக் கொண்டாடும் பாகிஸ்தான்… மூலை முடுகெல்லாம் பரவும் திமுகவின் புகழ்..!

 

மு.க.ஸ்டாலினை ஹீரோவாகக் கொண்டாடும் பாகிஸ்தான்… மூலை முடுகெல்லாம் பரவும் திமுகவின் புகழ்..!

டெல்லியில் நாளை பாஜக அரசை எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஹீரோவாக கொண்டாடி வருகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள். 

டெல்லியில் நாளை பாஜக அரசை எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஹீரோவாக கொண்டாடி வருகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள். 

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள, அனைத்து தலைவர்களையும், மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை டெல்லி ஜந்தர்மந்தரில், திமுக  உட்பட அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.

MKS

இந்த போராட்ட அறிவிப்பை பாகிஸ்தான் ரேடியோக்களும், பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன. அதில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான திமுக டெல்லியில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்கான மோடி அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதாக அப்பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை கடுமையாக கண்டித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஸ்டாலின் தெரிவித்திருப்பதையும் பாகிஸ்தான் ஊடகங்கள் விளம்பரம் செய்து வருகின்றன.