மு.க.ஸ்டாலினை ஆட்டிப்படைக்கும் ஐம்பது பேர்… மாமாவுக்கு பாடம் புகட்டும் மருமகன் சபரீசன்..!

 

மு.க.ஸ்டாலினை ஆட்டிப்படைக்கும் ஐம்பது பேர்… மாமாவுக்கு பாடம் புகட்டும் மருமகன் சபரீசன்..!

இப்படியொரு வட்டத்துக்குள் ஸ்டாலினை கொண்டுவந்து நிறுத்தியிருப்பது அவரது மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.

திமுக  எப்படி முன்னேறியது? என்று கேட்டால், ‘பேசிப்பேசியே வளர்ந்த கட்சி இது’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். அண்ணா, கருணாநிதி, வைகோ, நாஞ்சிலார், துரைமுருகன், சாதிக்பாட்ஷா என்று ஆரம்பித்து பெரும் லிஸ்டே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட கட்சியின் தலைவராக இன்று இருக்கும் ஸ்டாலினின் மேடைப்பேச்சுக்கு உதவுவதோ ஒரு துண்டுச்சீட்டு.stalin


அதுவும் அவரது சொந்தக் கருத்துக் குறிப்புகள் இல்லை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களின் உழைப்பின் சுருக்கத்தைத்தான் அவர் பேசுகிறார் என்று சொல்லி தலையிலடிக்கின்றனர் தி.மு.க.வின் வி.ஐ.பி. சீனியர்கள். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்து ஸ்டாலினை இயக்க ஆரம்பித்துள்ளது ஓ.எம்.ஜி. டீம். இது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.


இவர்கள்தான் ஸ்டாலினின் உடையலங்காரத்தில் இருந்து அவர் பேச வேண்டியது வரை தீர்மானிக்கிறார்கள். இப்படியொரு வட்டத்துக்குள் ஸ்டாலினை கொண்டுவந்து நிறுத்தியிருப்பது அவரது மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இன்று இந்த ஓ.எம்.ஜி. டீம் ஓரளவை தாண்டி தி.மு.க.வின் உள் விவகாரங்களில் தலையிடுவதால் இந்த தரப்புக்கும், கட்சியின் நீண்ட கால வி.ஐ.பி.க்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது.


இந்த பஞ்சாயத்து பற்றிப் பேசும் கழக சீனியர் வி.ஐ.பி.க்கள் சிலர் “ஆமாங்க பேசி பேசி இந்த கட்சி வளர்ந்தது. அதுவும் எப்படி தெரியுமா? கையில் ஒரு எழுத்தை எழுதி வெச்சுக்காம, மைக்கை பிடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல் பேசும் திறன் மிக்க அறிஞர் அண்ணாதுரை, தலைவர் கலைஞர் போன்றோரால் வளர்ந்துச்சு இந்த கட்சி.stalin


இன்னைக்கு சேனல்களின் லைவ் செய்திகள், வாட்ஸ் அப், ட்விட்டர்னு ஆயிரம் வசதிகள் இருக்குது. எதிர்கட்சி தலைவர்களின் கருத்துக்கள், நாட்டு நடப்புகள்னு அடுத்த நொடியிலேயே தலைவர்களின் கவனத்துக்கு வந்துடும். அதை வெச்சு அப்டேட் பண்ணிக்கிட்டே அசத்தலா பேசலாம். ஆனால் அன்னைக்கு இதெல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும் வெளுத்தெடுப்பார்கள் எங்கள் தலைவர்கள்.


ஆனால் இன்னைக்கு ஸ்டாலினோ ஓ.எம்.ஜி. டீமின் கைகளில் சிக்கி, அவர்கள் எழுதிக் கொடுக்கும் துண்டுச் சீட்டை வைத்துக் கொண்டு, அதை விரிவாக்கி பேசுகிறார். தலைவர் பேசும் துண்டு சீட்டுக்குப் பின் எத்தனை பேரின் உழைப்பு இருக்குதுன்னு தெரியுமா..? ஓ.எம்.ஜி. டீம் இருக்குது, இதன் நிர்வாகி சுனில். இந்த அணியை ஸ்டாலினின் மருகமகன் சபரீசன் தான் கண்காணித்து, இயக்குகிறார்.


இவருக்கு உதவியாக அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்திக், அன்பில் மகேஷ், அப்துல்லா ஆகியோர் இருக்கிறாங்க. அடுத்து டிஜிட்டல் டீம், அரசியல் அலசல் டீம், இது போக அ.தி.மு.க. மற்றும் மோடி அரசின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை, பேட்டி ஆகியவற்றைக் கவனித்து ஸ்டாலினுக்கு அறிக்கை தயாரிக்கும் இருப்பத்தைந்து பேர் கொண்ட குழு உள்ளது.sabareesan


இவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்குதான்னு கவனிக்க ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருக்காங்க. இவங்களுக்கு உள் தகவல்களை எடுத்துக் கொடுக்க இப்ப ஆட்சியில் உள்ள தி.மு.க. ஆதரவு உயரதிகாரிகளும் இருக்கிறாங்க. இதெல்லாம் போதாதுன்னு மீடியா ரிசர்ச் டீம், ப்ரோக்ராம் அண்டு அப்பாயிண்ட்மெண்ட்ஸ் டீம் இப்படி பல நிலைகள் இருக்குது. இவங்களெல்லாம் சேர்ந்து உருவாக்கும் அறிக்கைகள், கண்டன உரைகள், வருத்தக் கடிதங்கள், வாழ்த்து மடல்களைத்தான் ஸ்டாலின் வெளியிடுறார். மேடைகளில் அவர் வைத்துக் கொண்டு பேசும் துண்டுச் சீட்டுக்களின் பின்னணியிலும் இவ்வளவு பேரின் உழைப்பும் இருக்கிறது.


ஆனால் தலைவர் கலைஞரெல்லாம் ‘சண்முகநாதன்’ அப்படிங்கிற ஒத்த மனுஷனை மட்டும் ஒத்தாசைக்கு வெச்சுக்கிட்டு தேசிய அரசியலின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். ஹும் அதெல்லாம் தமிழக அரசியலின் பொற்காலம்!” என்று முடித்தனர் பெருமூச்சோடு.