மு.க.ஸ்டாலினுக்கு பேச்சுத்திறமைதான் இல்லை.. ஆனால் இந்தியா முழுவதும் பேசப்படுகிறார்..!

 

மு.க.ஸ்டாலினுக்கு பேச்சுத்திறமைதான் இல்லை.. ஆனால் இந்தியா முழுவதும் பேசப்படுகிறார்..!

தொடர்ந்து இதுபோல வடமாநிலங்களில் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனது தந்தை கருணாநிதியின் புகழை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போல அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவில் பழக்கத்திற்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத பல்வேறு சாதனைகளை செய்தவர் கருணாநிதி. சென்னையிலிருந்து டெல்லியை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.Stalin

அவர் தேசிய அளவில் அனைத்து கட்சி நிறம் முக்கியத்துவம் அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதி அளவுக்கு பேச்சுத்திறமை இல்லாத போதிலும் தேசிய கட்சியே கருணாநிதியைப் போல கொண்டாடுகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்ற போதிலும் தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி இமாலய வெற்றி பெற்றதையடுத்து தேசிய அளவில் முக ஸ்டாலின் மீதான மரியாதை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.stalin vaiko

அதேபோல மத்திய பாஜக அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை நாட்டின் முதல் வருவதாக எதிர்ப்பதிலும் முனைப்பு காட்டி வரும் முகஸ்டாலின் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். இதனால் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மு.க.ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கடந்த மாதம் மகாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். 

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பின் பேரில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதேபோல் வரும் டிசம்பர் 29ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹேமந்த் சோரன் தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.stalin

தொடர்ந்து இதுபோல வடமாநிலங்களில் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனது தந்தை கருணாநிதியின் புகழை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.