மு.க.ஸ்டாலினுக்கு குடைச்சல்… ரஜினி கட்சியில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!

 

கராத்தே தியாகராஜன், திமுக – காங்கிரஸ் பற்றிய தகவல்களை ரஜினியிடம் அவ்வப்போது கூறி வருவதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முயன்றதாகவும் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணியில் அவர் ரஜினியிடம் திமுக சார்ந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டதே காரணம் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளது. azhagiri

தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 21ல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கராத்தே தியாகராஜன் பேசும்போது, ‘கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காங்கிரசுக்கு 4 வார்டுகள் தான் தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. மீண்டும் தி.மு.க.விடம் பேச்சு நடத்திய பின் 10 வார்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. எனவே இந்த தேர்தலில் தென் சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டால் உள்ளூர் கட்சிகளின் புரிந்துணர்வுடன் 35 வார்டுகளில் வெற்றி பெற முடியும். எனவே தி.மு.க. மாவட்ட செயலர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தாமல் ஸ்டாலினிடம் பேசி கணிசமான பங்கீட்டை காங்கிரஸ் பெற வேண்டும்’’ எனப்பேசினார். karate thiagarajan

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ‘உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத் தான் காங்கிரசுக்கு பல்லக்கு துாக்குவது’ என்றார். அதற்கு கராத்தே தியாகராஜன் ‘சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு துாக்க சொல்லவில்லை’ என்றார்.

 இதனால் தி.மு.க. – காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டது. இதையடுத்து நேரு வெளியிட்ட அறிக்கையில் ‘கூட்டணி தொடர்பாக நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து’ என்றார். உடனே கராத்தே தியாகரஜனும் ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேரு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்றால் நான் கூறியதும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து’ என்றார். 

ஆனால், இந்த விளக்கத்தை தி.மு.க. மேலிடம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அக்கட்சியின் மூத்த எம்.பி.யான டி.ஆர்.பாலு டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து கராத்தே தியாகராஜன் மீது புகார் கூறி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி இருக்கிறார். தி.மு.க. நெருக்கடியை தொடர்ந்து கராத்தே தியாகராஜன் நேற்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார்.stalin

இதன் பின்னணியில் கராத்தே தியாகராஜன், திமுக – காங்கிரஸ் பற்றிய தகவல்களை ரஜினியிடம் அவ்வப்போது கூறி வருவதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முயன்றதாகவும் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது. அதனையடுத்து கராத்தே தியாகராஜனின் பேச்சுக்களும் தலைமைக்கெதிராக இருப்பதால் அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.