மு.க.ஸ்டாலினிடம் சிக்கிய எடப்பாடியாரின் முக்கிய ஆதாரம்.. அதிமுகவினர் வைத்த சூனியம்..!

 

மு.க.ஸ்டாலினிடம் சிக்கிய எடப்பாடியாரின் முக்கிய ஆதாரம்..  அதிமுகவினர் வைத்த சூனியம்..!

போட்டோ வேறா? இதை வைத்து தி.மு.க.காரர்கள் சிரிசிரியென சிரிக்கின்றனர். எங்க கட்சியே எங்கள் முதல்வருக்கு சூனியம் வைத்துவிட்டது.

மு.க.ஸ்டாலினிடம் சிக்கிய எடப்பாடியாரின் முக்கிய ஆதாரம்..  அதிமுகவினர் வைத்த சூனியம்..!

ஏதோ ஒரு வழிப்பறி, எங்கேயோ ஒரு திருட்டு என எதுவும் நடந்துவிட கூட கூடாது. உடனே தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதை சுட்டிக் காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வறுவறுவென வறுத்து தள்ளுவார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். இந்த நிலையில், அவர் சக்கை போடாக வைத்துச் செய்யுமளவுக்கு ஒரு ஆதார ஆவணம் அவர் கைகளில் கிடைத்துள்ளது. அதை உருவாக்கிக் கொடுத்ததே அ.தி.மு.க.வினர்தான் என்பதுதான் இதில் ஹைலைட்டே.

ஜெயலலிதா மறைந்த பின் அ.தி.மு.க., எப்படியெப்படியோ தலைகீழாக மாறிவிட்டது. அந்த வகையில் இப்போது தமிழக முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமாகவும் இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி பற்றிய புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இப்படி நடக்கலாம்? என்று சீனியர் அ.தி.மு.க.வினரே அதிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படி என்ன ஆச்சு? அவர்களிடமே கேட்டபோது, ”முதல்வர் சமீபத்தில் தன் சொந்த மாவட்டமான சேலம் சென்றிருந்தார். அப்போது ஆத்தூர் பகுதியில், தி.மு.க.விலிருந்து விலகி, எங்கள் கட்சியில் இருநூறு பேர் இணையும் நிகழ்வு நடந்தது. இவர்கள் முதல்வரிடம் உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டு, போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.Raju

இப்படி இணைந்தவர்களில் சுரேஷ், சுப்பிரமணி எனும் இருவர் முக்கியமானவர்கள். இவர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து, முதல்வருடன் நெருங்கி நின்று பேசியும், அமர்ந்தும் இருக்கிறார்கள். இதுதான் இப்போது விவகாரமாகியுள்ளது.

இவர்கள் இருவரும் கிரிமினல்கள். கல்லாநத்தம் சுரேஷ், புங்கன்வாடி சுப்பிரமணி என அழைக்கப்படும் இருவர் மீதும் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், செம்மரம் வெட்டியது என அத்தனை வகை குற்ற வழக்குகளும் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் முக்கிய காவல் நிலையங்களில் உள்ளன.

இவ்வளவு ஏன், குண்டாஸ் வழக்கே இவர்கள் மேல் பாய்ந்துள்ளது. இப்படிப்பட்டவர்களை கட்சியில் இணைத்ததே தவறு, இதில் பூங்கொத்து, போட்டோ வேறா? இதை வைத்து தி.மு.க.காரர்கள் சிரிசிரியென சிரிக்கின்றனர். எங்க கட்சியே எங்கள் முதல்வருக்கு சூனியம் வைத்துவிட்டது. ஆட்களை கட்சிக்கு இழுப்பது பெரிதல்ல, அவர்கள் எப்படிப் பட்டவர்கள்? என்பது தெரிந்து, அறிந்து செய்ய வேண்டாமா?” என்கின்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டோ விவகாரத்தைக் கையிலெடுத்து வைத்து எடப்பாடியாரை விமர்சிக்கும் தி.மு.க. ‘அந்த ரெளடிகள் எங்கள் கட்சியினர் ஒன்றும் கிடையாது. சேர்ந்த நபர்களில் யாரோ ஓரிருவர் தி.மு.க.வில் இருந்து சென்றவர்களாக இருக்கலாம். ரெளடிகள், குண்டர்கள் கூட உட்கார்ந்து படமெடுத்துவிட்டு, இப்போது அவர்கள் தி.மு.க.வில் வளர்ந்தவர்கள் என எங்கள் மீது பழி போடுவதா?” என்று குத்தியிருக்கின்றனர்.