முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்!

முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்!

அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். தான் நாடியதை சிறப்புக்குரியதாக தேர்வு செய்கின்றான். மக்கா, மதீனா, பாலஸ்தீன் போன்ற இடங்கள் அல்லாஹ் தேர்வு செய்த புனித இடங்களாகும். காலங்களில் சிறந்தது புனிதமான நான்கு மாதங்கள். மாதங்களில் சிறந்தது ரமலான் மாதம். நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை. நேரங்களில் சிறந்தது ஸஹர் வேளை. இவை இறைவன் தேர்வு செய்து தந்துள்ள சிறப்புக்குரிய காலங்களாகும். அல்குர்ஆன் கூறும் புனித மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். 

muslim

முஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சமாதானத்தின் அடையாளமாக இருக்கிறது. அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது.

‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என அவனது பதிவுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அந்த நான்கு மாதங்களில் மோதல்களை ஹராமாக்கிய இந்த தீனுல் இஸ்லாம் தான் சீரான, நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்கிறது அல்குர்ஆன் சூரா தௌபா புனித நூல். 

mosque

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜுப் பேருரையில் ‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாள் முதல் அவனது விதிப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. மூன்று மாதங்கள் தொடராகவும் ஒன்று இடையில் தனியாகவும் அமைந்துள்ளது. தொடராக வரும் மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என்பனவாகும். தனியாக வருவது ரஜப் மாதம் ஆகும். அது ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது’. 
கண்ணியமிக்க இக்காலப்பகுதியை உரியமுறையில் பயன்படுத்தி இறை திருப்தியை பெற முயற்சிக்காமலிருப்பது மிகப் பெரும் அநியாயமும் கைசேதமும் ஆகும் என அல்குர்ஆன் சூறா தவ்பா 36ம் வசனத்தில் குறிப்பிடுகிறது.
எனவே இந்த முஹர்ரம் தினத்தில் எல்லோருக்கும் அமைதியைக் கொண்டு வரட்டும் என வாழ்த்துவோம்!