முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள் ஏன் சிறப்பானது?

 

முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள் ஏன் சிறப்பானது?

பக்கத்து வீட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு ஒரு வாரமாய் வணக்கம் வைத்து, ரமலான் என்றால் பிரியாணியை மட்டுமே நாம் நினைவுக்கு கொண்டு வருகிறோம். ரமலான் பண்டிகைப் பற்றியும் நோன்பு இருக்கும் முறைகளைப் பற்றியும் வேறு எந்தவிதமான தகவல்களையும் நான் தெரிந்துக் கொள்ள  முயற்சித்ததே இல்லை.

பக்கத்து வீட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு ஒரு வாரமாய் வணக்கம் வைத்து, ரமலான் என்றால் பிரியாணியை மட்டுமே நாம் நினைவுக்கு கொண்டு வருகிறோம். ரமலான் பண்டிகைப் பற்றியும் நோன்பு இருக்கும் முறைகளைப் பற்றியும் வேறு எந்தவிதமான தகவல்களையும் நான் தெரிந்துக் கொள்ள  முயற்சித்ததே இல்லை. ஆனால், நாம் நினைப்பது போல் ரமலான் நோன்பு இருப்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. 
ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள், நோன்பின் போது நோன்புக்காக சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், நோன்பு இருக்கும் சமயங்களில் பகல் பொழுதில் தண்ணீர் கூட அருந்துவதில்லை. பசி, கோடை வெய்யில் எல்லாம் தாண்டி, அவர்களுடைய எச்சிலைக் கூட முழுங்குவதில்லை. முப்பது நாட்கள் என்றால், முப்பது நாட்களும் உணவே எடுத்துக் கொள்ளாமல் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு இருக்கிறார்கள். 

ramzan fasting

ரமலான் காலத்தை, இறைவனை நெருங்குவதற்கான காலம் என்கிறது குரான். எந்த சவாலுக்கும் முன் தயாரிப்பு மிக அவசியமான ஒன்று. அது போலதான் ரமலான் நோன்பிற்கு முன்பாக அதற்கு ஏற்றார் போல அவர்கள் தங்களது உடலையும், உள்ளத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆன்மிக ரீதியாக அவர்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். பலர் நோன்புக்கு ஏற்றவாரு தங்கள் உணவு பழக்கத்தை முன்பே மாற்றி கொள்வார்கள். ரமலான் நோன்பிற்கு சில மாதங்களுக்கு முன்பே காபி அருந்துவதை கைவிட்ட நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். 

ramzan fasting

இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் முதல்முறையாக இந்த மாதத்தில்தான் அருளப்பட்டது.  முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும்; குரானை ஓத வேண்டும். ஏறத்தாழ 900 பக்கங்களுக்கு மேல் இருக்கும் குரானை, ரமலான் மாதத்தில் மட்டும் 12 முறைக்கும் மேல் முழுவதுமாக முஸ்லிம்கள் ஓதுவார்கள்.
நோன்பு என்பது இறைவனுக்காக நோர்க்கப்படுவது என்பது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையுடன் நோன்பு இருந்து, இறைவனை நோக்கி முழு மனதுடன் அவர்களது பிரார்த்தனைகளைச் சொல்லும் போது இறைவன் அவர்களது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறான்.

mutton briyani

இனி, ரமலான் பண்டிகையை வெறும் பிரியாணியோடு மட்டும் தொடர்பு படுத்தாமல், அவர்களது இறை நம்பிக்கைக்கு வணக்கம் சொல்லி, வாழ்த்துவோம்.