முழு லூசாக மாறிய ஆண் போட்டியாளர்கள்! என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டிற்குள்? 

 

முழு லூசாக மாறிய ஆண் போட்டியாளர்கள்! என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டிற்குள்? 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில் தினமும் எதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி சண்டை போட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை இறக்குவதற்குப் பதில் மாற்றி 16 பைத்தியங்களை இறக்கிவிட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக வனிதா, அபிராமி, மீரா, மதுமிதா ஆகியோர் முழு லூசு போல் நடந்து கொண்டு மற்றவர்களையும் லூசாக்கி வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போல் வேஷம் போட்டு இதுவரை பெண் போட்டியாளர்கள் நடந்து கொண்டது போல் நடித்து காட்டியுள்ளனர். 

குறிப்பாக ‘நான் தமிழ்ப்பொண்ணு’ என்று மதுமிதா கூறியதை போல் மோகன் வைத்யா, முகனிடம் நடித்து காட்டுகிறார். அதற்கு பெண் வேடத்தில் உள்ள தர்ஷனும், கவினும் எகிற ஊரில் உள்ள மொத்த லூசு கூட்டமும் இங்கே தான் இருப்பது போல் புரோமவில் காட்டப்பட்டுள்ளது. ஆண் போட்டியாளர்களின் இந்த வேஷத்தை பார்த்து பெண் போட்டியாளர்கள் சிரித்து வருகின்றனர் . எது எப்படியோ இன்றைக்காவது சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல், சந்தோஷமாக இருக்கின்றனர்.