முழு தொகையையும் நாணயமாக கொடுத்து புது ஸ்கூட்டர் வாங்கிய மத்திய பிரதேசக்காரர்….. 3 மணி நேரம் சில்லரையை உட்கார்ந்து எண்ணிய நிறுவனம்

 

முழு தொகையையும் நாணயமாக கொடுத்து புது ஸ்கூட்டர் வாங்கிய மத்திய பிரதேசக்காரர்….. 3 மணி நேரம் சில்லரையை உட்கார்ந்து எண்ணிய நிறுவனம்

மத்திய பிரதேசத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முழுத் தொகையையும் நாணயமாக கொடுத்து புது ஸ்கூட்டர் வாங்கிய ருசிகரமான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் வாகன விற்பனை நன்றாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை ஒரு நல்ல நாளில் வாங்க மக்கள் அதிக விரும்புவர் என்பதே இதற்கு காரணம். அது போல் மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் குப்தாவுக்கு தீபாவளியன்று ஒரு புது ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆக்டிவா

அதேசமயம் ஸ்கூட்டருக்கான முழுத்தொகையையும் நாணயமாகத்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்து இருந்தார். அவர் எதிர்பார்த்து இருந்த தீபாவளியும் வந்தது உடனே அருகில் உள்ள டூ வீலர் டீலர்ஷிப் நிறுவனத்துக்கு சென்று புது ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கினார். அதற்காக சுமார் ரூ.83 ஆயிரத்தை ரூ.10, ரூ.5 நாணயமாக அந்த நிறுவனத்திடம் கொடுத்தார்.

டீலர்ஷிப்

தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் விற்பனையில் பிசியாக இருக்கும் சமயத்தில் வாடிக்கையாளர் ஸ்கூட்டருக்கான பணத்தை சில்லரையாக கொடுத்ததும் டீலர்ஷிப் நிறுவன பணியாளர்கள் திகைப்படைந்து நின்று விட்டனர். இருப்பினும் அதனை எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல் அவர்கள் வாங்கி கொண்டனர். நிறுவன பணியாளர்கள் அந்த சில்லரையை சுமார் 3 மணி நேரம் உட்கார்ந்து எண்ணி சரிபார்த்து உள்ளனர்.