முளைகட்டிய பயறு இடியாப்பம்

 

 முளைகட்டிய பயறு இடியாப்பம்

தேவையான பொருட்கள்
முளைகட்டிய பயறு    – 1கப்
இடியாப்ப மாவு        – 2கப்
பெரிய வெங்காயம்    – 1
தக்காளி                – 1
குடமிளகாய்            – 1(சிறியது)
மிளகாய்த்தூள்        – 1டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி            – சிறிதளவு
கறிவேப்பிலை        – சிறிதளவு

தேவையான பொருட்கள்
முளைகட்டிய பயறு    – 1கப்
இடியாப்ப மாவு        – 2கப்
பெரிய வெங்காயம்    – 1
தக்காளி                – 1
குடமிளகாய்            – 1(சிறியது)
மிளகாய்த்தூள்        – 1டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி            – சிறிதளவு
கறிவேப்பிலை        – சிறிதளவு
பெருங்காயத்தூள்        – சிறிதளவு
எண்ணெய்            – 4டேபிள் ஸ்பூன்
உப்பு                – தேவையான அளவு

payaru

செய்முறை
இடியாப்ப மாவை வெந்நீர் விட்டு பிசைந்து இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது ஆறிய பின் உதிரியாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி முளைகட்டிய பயறு, பெருங்காயத்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து கால் டம்ளர் நீர் விட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட  வேண்டும். இதனுடன் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கிய உணவாக இருக்கும். பயிறு சேர்ப்பதால் சத்துக்களும் அதிகம். எளிதில்

ediappam

செரிமாணமாகும் உணவாகவும் இருக்கும்.