முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் மேலடுக்கு சுழற்றி மண்டலத்தினால் கனமழை பெய்து வரும் நிலையில், முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக ஆயிரம் கன அடியாக  இருந்து வந்தது. தற்போது தேக்கடி பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 450 கன அடிகளாக குறைந்துள்ளது.

mullai periyar dam

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தேக்கடியில் மீண்டும் பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 450 கன அடிகளில் இருந்து 1,132 கன அடியாக உயர்ந்துள்ளது.
தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழைப் பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு வந்து சேரும் நீர்வரத்து மேலும் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 124 புள்ளி 5 அடியாக உள்ளதால், பெரியாறு அணையில் இருந்து தேனி மற்றும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 360 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.