முல்லா பரிமாறிய சூப்

முல்லா பரிமாறிய சூப்

தனது சமயோசித செயலால் எல்லோராலும் போற்றப்படுபவர் முல்லா நஸ்ருதீன். ஒருமுறை முல்லாவைச் சந்திக்க அவரது சொந்த கிராமத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். அப்படி முல்லாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர், கையில் வாத்து ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். முல்லாவிற்கு மகிழ்ச்சி. சொந்த ஊர்க்காரர் கொண்டு வந்திருந்த வாத்து சமைக்கப்பட்டது. முல்லாவும், வந்திருந்த விருந்தாளியுடன் வாத்து கறியைப் பகிர்ந்து உண்டார். 

கொஞ்ச நாட்கள் கழித்ததும், முல்லாவின் ஊரிலிருந்து இன்னொரு விருந்தாளி வந்தார். வந்தவர், தான் வாத்து கொண்டு வந்தவரின் நண்பர் என்றார். அவரையும் நன்றாக உபசரித்தார்  முல்லா. இப்படியே வரிசையாக பல நாட்கள் தொடர்ந்து பலரும் வந்து கொண்டே இருந்தார்கள். முல்லாவின் வீட்டை, கிராமத்து விருந்தாளிகள் உணவு விடுதி போலவே மாற்றிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் வாத்து கொண்டு வந்தவருக்கு நெருக்கமானவராகவே இருந்தார்கள். முல்லா நஸ்ருதீன் கடைசியில் எரிச்சலடைந்தார். 

ஒருநாள் கதவு தட்டப்பட்டது. அவர் திறந்து பார்த்தார். புதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் வாத்து கொண்டு வந்தவரின் நண்பரின் நண்பரின் நண்பன் என்றார் அவர். உள்ளே வாருங்கள் என்றார் நஸ்ருதீன். அவரை உள்ளே அழைத்துச் சென்றார். இருவரும் மேசை முன் அமர்ந்தார்கள். பிறகு அவர், தம் மனைவியை அழைத்து சூப் கொண்டு வா என்றார். விருந்தாளி அதை ருசித்துப் பார்த்தார். அது உப்புச் சப்பில்லாமல் வெறும் வெந்நீர் போலிருந்தது. இது என்ன சூப்? என்று கேட்டார் விருந்தாளி. இது அந்த வாத்தின் சூப்பின் சூப்பின் சூப்பின் சூப் என்றார் முல்லா நஸ்ருதீன்.
உண்மை, அன்பு எப்போதும் இரண்டாவது கைமாறி வருவது கிடையாது. அன்பை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது. ஒருவர் தாமே அதை உணர வேண்டும். அதனால், எல்லா மரபுகளும் பொய்யாய் அமைந்து விடுகின்றன. எல்லா வேதங்களும் தான், எல்லா வார்த்தைகளும் தான். கடைசியில் மிஞ்சுவது முல்லா நஸ்ருதீனின் சூப் மட்டுமே!