முற்றும் சர்கார் சர்ச்சை: விஜய் போஸ்டர்களை கிழித்ததால் பதற்றம்!

 

முற்றும் சர்கார் சர்ச்சை: விஜய் போஸ்டர்களை கிழித்ததால் பதற்றம்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. சமூக பிரச்னைகள் பலவற்றை குறித்து இப்படத்தில் பேசப்பட்டிருப்பதால், பட ரிலீஸுக்கு முன்பில் இருந்தே பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இந்நிலையில், சர்கார் படத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இப்படத்தில் அரசின் இலவச பொருள் விநியோகம் குறித்தும், அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதால் படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

sarkar

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி அதிமுகவினர் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ‘சர்கார்’ திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சர்கார் படக்குழு மீது ஆத்திரத்தில் உள்ள அதிமுகவினர் விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சர்கார் படக்குழு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.