முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியானேன் – மீரா மிதுன் 

 

முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியானேன் – மீரா மிதுன் 

டெல்லியில் தேர்வு எழுதி முறையாகதான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பதவி வாங்கினேன் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். 

மீரா மிதுன்

சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ஐ எம் வாட்சிங் என எழுதியிருந்தார். இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் அந்த பதவி எவ்வாறு கிடைத்தது என மீரா விளக்கமளித்துள்ளார். 

கருத்துக்களை பதிவு செய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீரா மிதுன்,  “ஒரு வருடமாக எனக்கு அநீதி நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் தமிழர்களுக்குதான் எதிர்காலம் இல்லை. வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சிறியப்படம் பெரியப்படம் என பார்க்காமல் அனைத்து படங்களையும் பொதுமக்கள் பார்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது புகார் கொடுத்தால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு 60 சதவீத வன்கொடுமை சமூக வலைதளங்களிலேயே நடக்கிறது. சமூக வலைதளம் மற்றும் டெக்னாலஜியால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பாதிக்கப்படுவது முழுவதுமே பெண்கள்தான். பழிவாங்கும் கருவியாக சமூக வலைதளம் உள்ளது. பேசுவது மனித உரிமை. ஆனால் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. 

மீரா மிதுன்

ஆபாச இணையதளங்களில் என்னுடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எனக்கு தமிழில் பெரியப் படம் பண்ணுவதற்கு எந்த ஐடியாவும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. டெல்லியில் தேர்வு எழுதி முறையாகதான் வாங்கினேன். டிசம்பர் மாதம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ளேன். ஜெயலலிதாவுக்கு அப்பறம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. லஞ்சமில்லாத மாநிலத்தை உருவாக்குவதே என்னுடைய லட்சியம்” எனத் தெரிவித்தார்.