முறைகேடு புகார் எதிரொலி! ஒரே நாளில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்!

 

முறைகேடு புகார் எதிரொலி! ஒரே நாளில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்!

இன்போசிஸ் நிறுவனத்தின் டாப் 2 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் வந்ததையடுத்து நேற்று அந்த நிறுவன பங்கின் விலை 16 சதவீதத்துக்கு மேல் குறைந்தது.

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இன்போசிஸ். இந்நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபத்தை குவித்து வருவதால் அந்நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் பெரும்பாலும் தயக்கம் காட்டுவதில்லை. கடந்த செப்டம்பர் காலண்டிலும் கூட இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நந்தன் நீல்கேனி

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலன்ஜன் ராய் ஆகியோர் நிறுவனத்தின் குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிப்பதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நீல்கேனி இது குறித்து நிறுவனத்தின் தணிக்கை குழு விசாரணை  நடத்தும் என அறிவித்தார்.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் வந்ததால் நேற்று பங்குச் சந்தைகளில் இன்போசிஸ் நிறுவன பங்கின் விலை கிடுகிடுவென குறைந்தது. நேற்று இன்போசிஸ் பங்கு விலை 16.21 சதவீதம் குறைந்து ரூ.643.30ஆக சரிவடைந்தது. 2013 ஏப்ரலுக்கு பிறகு நேற்றுதான் இந்த பங்கின் விலை இந்த அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்து இருந்தவர்களுக்கு நேற்று மட்டும் ஒட்டு மொத்த அளவில் ரூ.53,451 கோடி நஷ்டம் ஏற்பட்டது.