முறிந்த அப்பா-மகள் உறவு: நாமினேஷனில் கோபத்தைக் காட்டிய லாஸ்லியா

 

முறிந்த அப்பா-மகள் உறவு: நாமினேஷனில் கோபத்தைக் காட்டிய லாஸ்லியா

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 56 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இதுவரை பாத்திமா பாபு,  மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால், மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வார நாமினேஷன் படலம் நடைபெறுவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. அப்போது முதலில் சென்ற லாஸ்லியா அப்பா என்றும் பாராமல் சேரனை நாமினேட் செய்துள்ளார். 

அதற்கு காரணம் கூறுகையில், ‘கடந்த வாரம் ரொம்ப பிரச்சனை வந்தது. அவங்க எந்த response-யும் பண்ணல. நான் பேசும் போது கூட எதுமே பண்ணல அதுனா’ல சேரன்’. அது ஒரு பக்கம் இருக்கச் சேரன் வெளியே, ‘என் மகள் என்னை நாமினேட் செய்ய மாட்டா. நாங்கள் ஏற்கனவே பேசி வைத்துள்ளோம். என்னவாக இருந்தாலும் பண்ண மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.