முரளி விஜய் அவுட் ; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி !!

 

முரளி விஜய் அவுட் ; முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி !!

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

dc vs csk

ஐ.பி.எல் டி.20 தொடரில் இரண்டாவது குவாலிபையர் போட்டியான இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண்கின்றனர்.

murali vijay

சென்னை அணி; 
டூ பிளசிஸ், சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி, டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

டெல்லி அணி ; 

ப்ரிதீவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் முன்ரோ, அக்‌ஷர் பட்டேல், ஸ்ராபேன் ரூத்தர்போர்டு, கீமோ பவுல், அமித் மிஷ்ரா, டிரண்ட் பவுல்ட், இஷாந்த் சர்மா.