முரட்டு மீசையில் மிரட்டும் தனுஷ்…வைரலாகும் புது கெட்டப் போட்டோஸ்!

 

முரட்டு மீசையில் மிரட்டும் தனுஷ்…வைரலாகும் புது கெட்டப் போட்டோஸ்!

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும்  ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார். இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும்  ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் நடிகர் தனுஷின் D40 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் புதிய லுக்கில் நடித்துள்ளார். தேவர் மகன் மாதிரி மீசை வைத்து கொண்டு மிரட்டும் தனுஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ttn

முன்னதாக தனுஷ் நடிக்கும் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.