முரசொலி விவகாரம்… ராமதாசை நீதிமன்றத்துக்கு இழுத்த தி.மு.க! வருவாரா பெரியய்யா?

முரசொலி விவகாரம்… ராமதாசை நீதிமன்றத்துக்கு இழுத்த தி.மு.க! வருவாரா பெரியய்யா?

தனுஷ் நடித்த அசுரன் படம் நன்றாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியதால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று கிளப்பிவிட்டார். நிலப் பட்டாவை மு.க.ஸ்டாலின் வெளியிடவே, மூல பத்திரம் வேண்டும் என்று மாற்றினார் டாக்டர். இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.

முரசொலி விவகாரம் தொடர்பாக தி.மு.க தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கில் வருகிற மார்ச் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி டாக்டர் ராமதாசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

stalin-and-ramadoss

தனுஷ் நடித்த அசுரன் படம் நன்றாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியதால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று கிளப்பிவிட்டார். நிலப் பட்டாவை மு.க.ஸ்டாலின் வெளியிடவே, மூல பத்திரம் வேண்டும் என்று மாற்றினார் டாக்டர். இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், முன்பு பாரதிய ஜனதா கட்சியில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் பொறுப்பு வகித்தவர். தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். பா.ஜ.க நிர்வாகி புகார் அளிக்க, பா.ஜ.க-வில் தேசிய அளவில் பொறுப்பில் இருந்துவிட்டு தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் விசாரிக்க என்று முரசொலி விவகாரம் பிரச்னையானது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தகுந்த அமைப்பிடம் ஆவணங்களைக் காட்டத் தயாராக உள்ளது என்று தி.மு.க கூறியது. மேலும், பொய்யான குற்றச்சாட்டை கூறிய ராமதாஸ், சீனிவாசன் ஆதாரங்களை அளிக்க வேண்டும், இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரசொலி அறக்கட்டளையைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மார்ச் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி, முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவார் என்று அவரது கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.