‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே..?’ அலற வைக்கும் முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்..!

 

‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே..?’ அலற வைக்கும் முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்..!

மத்திய, மாநில ஆளுங்கட்சிகளைத் திணறச் செய்யும் வகையில் திமுக சார்பில் அட்டாக் ஆட்டத்தை ஆடாததும் ஸ்டாலினை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.

முரசொலி, மிசா பிரச்சினைகளில் திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள், மூத்த முன்னோடிகள் என்னதான் பதில் சொன்னாலும் கடைசியில்… தலைவரான ஸ்டாலினே மேடைக்கு மேடை இதைப் பேச வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது பாமக. சமூக தளங்களிலும், இணைய உலகத்திலும் உருவான இந்த திமுக மீதான தாக்குதல் இன்று விரிவாகி அனைத்து ஊடகங்களிலும் பரவிவிட்டது. 

இந்த நிலையில் திமுக ஐடி விங் இந்தப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியும் வகையில் பதில் சொல்லாததும், மத்திய, மாநில ஆளுங்கட்சிகளைத் திணறச் செய்யும் வகையில் திமுக சார்பில் அட்டாக் ஆட்டத்தை ஆடாததும் ஸ்டாலினை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.

udhaya

தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே ஐடிவிங் முறையாக திட்டமிட்டுக் கட்டமைப்பட்டு அனைத்து அளவுகளிலும் நிர்வாகிகளும் இருப்பது திமுகவில்தான். ஆனால் திமுக ஐடிவிங் அண்ணா பதவியேற்ற நாள், கலைஞர் தலைமையேற்ற நாள் என்று  ஆராய்ந்து போட்டோ கார்டு போடுகிறதே தவிர, அதிமுக அரசை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு முக்கியப் பிரச்சினைகளை கையிலெடுத்து எரிய வைக்கத் தவறிவிட்டது என்று கருதுகிறார் ஸ்டாலின். இதனால் ஐடிவிங் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்.mk stalin

ஐடி விங்கில் இருக்கும் இசை, நெல்லை ஜோக்கின், நாங்குநேரி எட்வின், மேலும் புதுக்கோட்டை அப்துல்லா போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் கொஞ்சம் விதிவிலக்காக தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்றபோதும் ஒட்டுமொத்த திமுகவின் ஐடி விங் செயல்பாடு ஸ்டாலினை திருப்திப்படுத்தவில்லை. 

எதிர்கட்சியாக இருக்கும்போது தாக்குதல் ஆட்டம் ஆடாமல், தடுப்பாட்டம்  ஆடும் அளவுக்கு திமுகவை ஆக்கிவிட்டார்கள் என்று ஐடி விங் தலைவர் பி.டி.ஆர்.தியாகராஜன் மீதும் பல நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கூறி, தகுந்த ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு ஐடிவிங்கை பலப்படுத்துமாறு திமுக தலைமைக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன. எனவே ஐடி விங்கின் முழு கட்டமைப்பையும் மாற்றலாமா என்று உதயநிதியும், ஸ்டாலினும் ஆலோசனை செய்துகொண்டு இருக்கிறார்கள்