‘முரசொலி பற்றி ரஜினி கூறியது வாய் தவறி வந்திருக்கும்’ : கே.எஸ்.அழகிரி பேட்டி !

 

‘முரசொலி பற்றி ரஜினி கூறியது வாய் தவறி வந்திருக்கும்’ : கே.எஸ்.அழகிரி பேட்டி !

ரஜினி துக்ளக் இதழுடன் முரசோலையை இணைத்துப் பேசியது தவறு தான். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லியிருக்க வேண்டும், இல்லையென்றால் முரசொலி வைத்திருந்தால் திமுக என்று சொல்லியிருக்க வேண்டும்

திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் திமுக காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 12 மணிக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி, அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கும் என்று தெரிவித்தார். 

ks azhagiri

அதனைத் தொடர்ந்து முரசொலியைக் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, மு.க ஸ்டாலினுடனான சந்திப்பின் போது தர்பார் படத்தைப் பற்றிப் பேசினோம். மு.க ஸ்டாலின் அவருக்கு அந்த படம் பிடித்திருந்ததாகச் சொன்னார். ரஜினி ரொம்ப நல்லவர். அவர் கூறிய கருத்து வாய் தவறி வந்திருக்கும். ரஜினி துக்ளக் இதழுடன் முரசோலையை இணைத்துப் பேசியது தவறு தான். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லியிருக்க வேண்டும், இல்லையென்றால் முரசொலி வைத்திருந்தால் திமுக என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல், அவர் இவ்வாறு பேசியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி இதனைச் சொந்தமாக யோசித்துப் பேசியுள்ளார். சினிமாவாக இருந்திருந்தால் அவருக்கு வசனம் எழுதி கொடுத்திருப்பார்கள், அதனால் தான் அவர் குழம்பி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.