முரசொலி படிப்போரை நம்பாத மு.க.ஸ்டாலின்… இந்திக்காரருடன் கைகோர்ப்பு..!

முரசொலி படிப்போரை நம்பாத மு.க.ஸ்டாலின்… இந்திக்காரருடன் கைகோர்ப்பு..!

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள தி.மு.க., 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலை  எதிர்கொள்ள இருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘’தமிழகம் இழந்த புகழை மீட்கவும், நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்ட மிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒருமித்த கருத்துடைய தமிழக இளைஞர்கள், ஐ.பி.ஏ.சி., என்ற அமைப்பின் கீழ், நம்முடன், 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர். இதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 Stalin

இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அமிட்ஷா கேட்டுக்கொண்டதால் தான் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்து கொண்டதாக சமீபத்தில் நிதீஷ்குமார் கூறினார், ஆக பிரசாந்த் கிஷோர் அமிட்ஷாவின் ஆள் என்று தெரிகிறது இவர் தி மு க விற்கு ஆலோசகர் என்பது சற்று இடிக்கிறது. ஹிந்தி வேண்டாம் ஆனால் ஹிந்தி காரன் வேணும்.  முரசொலி படிக்கும் தொண்டர்களை நம்பி பயன் இல்லை என்று நினைத்து விட்டார் போலும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.