முரசொலி அலுவலகத்தின் நிலம் குறித்த புகார்: விசாரணை செய்யக் கோரி எஸ்.சி ஆணையத்திடம் மனு…!

 

முரசொலி அலுவலகத்தின் நிலம் குறித்த புகார்: விசாரணை செய்யக் கோரி எஸ்.சி ஆணையத்திடம் மனு…!

திமுக கட்சிக்குச் சொந்தமான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று புகார்கள் எழுந்ததது.

திமுக கட்சிக்குச் சொந்தமான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று புகார்கள் எழுந்ததால், திமுக தலைவர் ஸ்டாலின் அந்த முரசொலி அலுவலகத்தின் பட்டாவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Murasoli office

இருப்பினும், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கட்டப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்யும் படி பா.ஜ.க மாநிலச் செயலாளர் இரா.ஸ்ரீனிவாசன், எஸ்.சி ஆணைய துணைத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாகத் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து, பா.ஜ.கவின் தேசிய செயலர் எச்.ராஜாவும் முரசொலி அலுவலகம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பட்டாவாங்கியிருப்பது 1985 என்றால் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 இல் என இருந்தால் ஸ்டாலின் ஏன் மூலப்பத்திரத்தை வெளியிடத் தயக்கம் காட்டுகிறார் என்று கேள்வியெழுப்பியுள்ளார். நிலத்தை அபகரிக்கும் கட்சி திமுக என்ற புகார் எழுவதால் மு.க ஸ்டாலின் மூலப்பத்திரத்தை வெளியிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.