முரசொலியை வைத்திருந்தால் திமுக… துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி!- ரஜினிகாந்த்

 

முரசொலியை வைத்திருந்தால் திமுக… துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி!- ரஜினிகாந்த்

துக்ளக் இதழின் 50வது ஆண்டு சிறப்பு மலர் வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 50 ஆவது ஆண்டு சிறப்பு இதழை வெங்கையா நாயுடு வெளியிட முதல் பிரதியை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

அதன்பின் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “துக்ளக்கை  சோ எப்படி எடுத்து சென்றாரோ அதே போல தான் இன்று துக்ளளை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. குருமூர்த்தியை சோ முழுமையாக நம்பினார். குருமூர்த்தியால் மட்டும் தான் இவ்வளவு தூரம் துக்ளக்கை எடுத்து செல்ல முடியும் என்று சோவுக்கு தெரியும் வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம், இதுவும் ஒரு தந்தைக்குரிய பதவிதான்.

பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் வெங்கையா. சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்துக்கொண்ட துறை பத்திரிக்கை துறை. அவரது ஆயுதம் துக்ளக்.

முரசோலியை வைத்திருந்தால் அவர் திமுக. துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி. சமுதாயம் கெட்டுப்போயுள்ளது. தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிக்கையாளர் மிகவும் அவசியம். கவலைகளை நிரந்தரமாக்கிக்கொள்வதும், தற்காலிகமாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி. தற்காலிகமாக்கிக்கொண்டால் அறிவாளி. பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீர் என்ற பொய்யை கலந்துவிடக்கூடாது. பாலையும் நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும் பொய்யையும் பிரிக்க வேண்டும்” எனக்கூறினார்.