முயற்சி செய்வதை மட்டுமே மூலாதாரமாக கொண்ட ‘மூல நட்சத்திரம்’ – பொதுப் பலன்கள்

 

முயற்சி செய்வதை மட்டுமே மூலாதாரமாக கொண்ட ‘மூல நட்சத்திரம்’ – பொதுப் பலன்கள்

அனுமனின் நட்சத்திரம் மூல நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்!

அனுமனின் நட்சத்திரம் மூல நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்!

உட்கார்ந்து இருக்கும் சிங்கத்தைப் போன்ற தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் மூல நட்சத்திரம் ஆகும். இது தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். அதேபோல அறிவையும், புகழையும் பெறுவதற்கு மிகவும் முயற்சி எடுப்பார்கள். அதனால் கொள்கைப் பிடிப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அதிகம் என்று கூறலாம். நல்லவர்களாக இருக்கும் அதேசமயம் வல்லவர்களாகவும் இருப்பார்கள். போராடுவதற்கு துளிகூட தயங்காதவர்கள்.

moolam

மூல நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. எனவே மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இசையிலும், மற்ற கலைகளிலும் விருப்பம் இருக்கும். மேலும் ‘சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட, பூனைக்கு தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமும், தர்ம சிந்தனையும் அதிகம் கொண்டவர்கள். குடும்பத்தில் அதிக பாசம் காட்டுவார்கள். பொறுமையின் சிகரமாக திகழ்ந்தாலும், அநியாயம் செய்பவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள். அந்த வகையில் நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக மூல நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். கல்வி அறிவும், சிறந்த பேச்சாற்றலும் உடையவர்கள். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வாறான பிரச்னைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.