முயற்சியை திருவினையாக்கும் முப்பாத்தம்மன்!

 

முயற்சியை திருவினையாக்கும் முப்பாத்தம்மன்!

முப்பாத்தம்மன் வாழிபாட்டின் முக்கியத்துவங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள், முப்போகத்தம்மாள் என்று பக்தியோடு வணங்கி வந்தனர். அவளே விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து,வேளாண் மக்களைப் பாதுகாத்துவந்தாள். 

காலப்போக்கில் முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் என வரலாறு தெரிவிக்கிறது.சென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்துவருகிறாள் அருள்மிகு ஸ்ரீ முப்பாத்தம்மன்.

sakthijkk

ஒருகாலத்தில் மாம்பலம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் நீர்வளமும், நிலவளமும் கொண்ட விவசாயப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அப்போது தோன்றிய புற்றில் இருந்து வெளிப்பட்ட நல்லபாம்பு ஒன்று இங்கே கோயிலைக் கட்ட பணித்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் பெருவெள்ளத்தில் கொண்டு வரப்பட்ட முப்பாத்தம்மன் சிலை புற்றை வந்து அடைய அதைக்கொண்டே கோயில் உருவானதாகச் சொல்கிறார்கள்.காலம் அறியமுடியாத நாயகி என்றே கூறப்படும் இந்த அன்னையின் கோயில் ஒருசுற்று கொண்ட சிறிய அளவிலேயே அமைந்துள்ளது. 

எனினும், எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கணபதி, நவகிரகங்கள், முருகப்பெருமான்,ஐய்யப்பன், ஆஞ்சநேயர் எனப் பல சந்நிதிகளைக் கொண்டு இந்த ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

sakthihjjl

இந்த ஆலயத்தின் சிறப்பே இங்கு அமைந்துள்ள பிரமாண்ட புற்றுதான். சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்து இருக்கும் இந்தப் புற்றில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் தெளித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்துவைப்பாள் முப்பாத்தம்மன் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

கடுமையான நோய் கொண்டவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர், திருமண வரம் வேண்டுவோர் எனப் பலரும் இங்கு வந்து இந்தப் பாம்பு புற்றைச் சுற்றி வந்து பால் ஊற்றி பலன் பெறுகிறார்கள்.

கருவறையில் அழகும் கருணையும் பொங்கக் காட்சியருளும் இந்த தேவி பக்தர்களின் பரவசத்துக்கு உரியவள் என்று போற்றப்படுகிறாள். சிறிய வடிவச் சிலை என்றாலும், காண்பவரோடு கலந்துவிடக்கூடிய கருணை கொண்டவள்.

sakthikgjk

வேண்டியவை யாவையும் நிறைவேற்றித் தரும் இந்த மங்கல நாயகியாம் முப்பாத்தம்மனை ஆடி மாதங்களில் வந்து வணங்குவது சிறப்பானது. தீபமேற்றி,வளையல் காணிக்கை அளித்து வணங்கி நிற்கும் பெண்களின் கூட்டம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. 

அதுவே இந்த அன்னை மிகப்பெரிய வரப்பிரசாதி என்பதை நமக்கு உணர்த்துவதுடன், நம்மை வணங்கும்படியும் செய்கிறது.எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு சிறப்பான வழிபாடு நடந்தாலும்,ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா இங்கு வெகு சிறப்பானது.

muppaththamman

கூட்டம் பொங்கி வழியும் இந்த ஆலயத்தில் எங்கும் ஒருவிதமான புனித அதிர்வு இருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த ஆலயத்தில் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு தடை தாமதங்கள் விலகும்.

அன்னை ராஜராஜேஸ்வரியின் மற்றொரு வடிவமாகிய முப்பாத்தம்மனை ஒருமுறை நேரில் வந்து வழிபட்டுப் பாருங்கள். உங்கள் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் அதிசயத்தைக் காண்பீர்கள் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள். அன்னையின் அருள் இன்பத்தை காணுங்கள்.