முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்! நீதி கதைகள்!

 

முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்! நீதி கதைகள்!

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியக் கனவு என்பது மிக மிக அவசியமாகும். கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருந்தால் அது வெறும் கனவாகத் தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால் தான் அது செயல் வடிவம் பெறும். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியக் கனவு என்பது மிக மிக அவசியமாகும். கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருந்தால் அது வெறும் கனவாகத் தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால் தான் அது செயல் வடிவம் பெறும். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள். கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம் தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும். அதை அடைவதற்கான முயற்சியில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். 

success

ஓரிடத்தில் தங்கம் கிடைக்கும் என்பதை அறிந்த ஒருவர், தனது நண்பருடன் இணைந்து தங்கத்தை வெட்டி எடுக்க அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார். சில நூறு அடிகளில் தகதகக்கும் தாதுப்பொருளை இருவரும் கண்டனர். உடனே சில இயந்திர சாதனங்களை ஏற்பாடு செய்து சுரங்கத்தை மேலும் தோண்டினார்கள். தொடர்ந்து தோண்டத் தோண்ட பளபளக்கும் தங்கத்தாதுக்கள் கண்ணில் படவே இல்லை. தங்கத்தை அள்ளலாம், பணம் குவியும் என்ற ஆசை நிராசையான நிலையில் முயற்சியைக் கைவிட முடிவு எடுத்தனர். உடனே இதற்கென வாங்கிய இயந்திரத்தினை வந்த விலைக்கு விற்று விட்டு திரும்பி விட்டனர்.
அந்த இயந்திரத்தை வாங்கியவருக்கு, சுரங்கம், தங்கத்தாது இது பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாததால், அதற்குரிய நிபுணரை அழைத்து இறுதியாக சோதித்து முடிவு எடுக்கலாம் என்று எண்ணினார். அதன்படி வந்த எஞ்சினியர் அவரது சோதனைகள் மூலம் இதற்கடுத்த மூன்றாவது அடியில் தங்கத்தாது கிடைக்கலாம் எனக் கண்டறிந்தார். உடனே, செயல்படுத்தி இயந்திரத்தை வாங்கியவர் தங்கச் சுரங்கம் தோண்டி கோடீஸ்வரர் ஆனார்.

sucess

ஆம் நண்பர்களே! கனவு காணுங்கள். கனவில் இருந்து தான் சிந்தனை பிறக்கும். உங்கள் சிந்தனை தான் செயல்களாகும். உங்கள் இலட்சியக் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்துதலே வெற்றியாகும். மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் கனவு மெய்ப்பட வேண்டும். உங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால்,உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்.