மும்பை 40 மாடி கட்டிடத்தில் திடீரென உதித்த அருவி! உண்மை என்ன?

 

மும்பை 40 மாடி கட்டிடத்தில் திடீரென உதித்த அருவி! உண்மை என்ன?

குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு எற்பட்டதும், அதனால்தான் தண்ணீர் அப்படி கொட்டியதாகவும், இதற்கு தண்ணீர் தொட்டியை அமைத்துக் கொடுத்தவர் மன்னிப்பு கோரியதோடு பாதிக்கப்பட்ட வீடுகளை சரி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ள விஷயமும் பிறகுதான் தெரியவந்தது.

சீனாவின் குய்யாங் மாகாணத்தில் லைபியன் சர்வதேச மைய கட்டிடத்தின் 108 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் செயற்கை அருவி சர்வதேச புகழ்பெற்றது. இந்தியாவிலும் முதன்முறையாக மும்பையில் 40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் செயற்கை அருவி கொட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. போட்டோவை பாத்துட்டீங்களா? சூப்பரா இருந்துச்சா? போதும் ஷோல்டரை இறக்கிங்க. ஏன்னா, அது ஒரிஜினல் இல்லை. அதாவது நாற்பதாவது மாடி உச்சியில் இருந்து தண்ணீர் கொட்டும் போட்டோ ஒரிஜினல். ஆனால், அது செயற்கை நீர்வீழ்ச்சியாக காட்டுவதுதான் ஒரிஜினல் இல்லை.

China’s artificial waterfalls building

மும்பையின் New  coffe parade அடுக்கு மாடிக் குடியிருப்பு 40 தளங்களைக் கொண்டது. மும்பையில் பெய்யும் கன மழையின் காரணமாகவே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதாகவும், மோடி அரசின் முன்முயற்சியில் இந்திய கட்டிடக்கலையின் வலிமையையும் நவீனத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது எனவும் ஷேர்செய்யப்பட்ட இந்த காட்சி உண்மையில் ஒரு இல்பொருள் உவமையணிக்கான எடுத்துகாட்டு. விஷயம் என்னவென்றால், குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு எற்பட்டதும், அதனால்தான் தண்ணீர் அப்படி கொட்டியதாகவும், இதற்கு தண்ணீர் தொட்டியை அமைத்துக் கொடுத்தவர் மன்னிப்பு கோரியதோடு பாதிக்கப்பட்ட வீடுகளை சரி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ள விஷயமும் பிறகுதான் தெரியவந்தது. சீனாவில் இருக்குற பஸ் ஸ்டாண்டை குஜராத் பஸ் ஸ்டாண்டா போட்டோஷாப்ல மாத்துனது நம்பி ஆட்சிய தூக்கி குடுத்த பசங்கதானே நம்ம பசங்க!