மும்பை நாக்பதா போராட்டம்…. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடரலாம்… போலீஸ் கமிஷனர் தகவல்

 

மும்பை நாக்பதா போராட்டம்…. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடரலாம்… போலீஸ் கமிஷனர் தகவல்

மும்பையில் அமைதியான குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடரலாம் என அந்நகர புதிய போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போலீஸ் கமிஷனராக இருந்த சஞ்சய் பார்வே கடந்த சனிக்கிழமையன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய கமிஷனராக பரம்பீர் சிங் அன்று பதவியேற்றார். புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு பிரபலங்கள் வகித்த இந்த பதவியில் நான் இருப்பதை கவுரவிக்கப்பட்டு இருப்பதாக உணருகிறேன்.

பரம்பீர் சிங்

எனக்கு முன் இருந்தவர்கள் மேற்கொண்ட நல்ல பணிகளை நான் தொடருவேன். என்னுடைய குழுவுடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பேன். இரவா அல்லது பகலா என்பது குறித்து கவலைப்படாமல், தெரு குற்றங்கள் கட்டுப்படுத்துதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன். மேலும், நிழல் உலக குற்றங்களை ஒழிப்பது போன்றவை எனது முன்னுரிமை பணிகள். 

நாக்பதா போராட்டம்

அமைதியான குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களை தொடரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மும்பையில் நாக்பதா பகுதியில் மோர்லேண்ட் சாலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தலைமையில் ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த  போராட்டத்தை குறிப்பிட்டுதான் அமைதியான குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களை தொடரலாம் என போலீஸ் கமிஷனர் கூறியதாக தெரிகிறது.