மும்பை தாராவி பகுதியில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவி பகுதியில் மேலும் புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மும்பை: தாராவி பகுதியில் மேலும் புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று கருதப்படும் தாராவி பகுதியில் இன்று புதிதாக 11 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தாராவியில் மொத்த கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 71-ஐ எட்டியுள்ளது.

பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) கூறியபடி, முகுந்த் நகரில் இருந்து நான்கு பேரும், சமூக நகர் மற்றும் ராஜீவ் நகரிலிருந்து தலா இரண்டு பேரும், சாய் ராஜ் நகர், போக்குவரத்து முகாம் மற்றும் தாராவியின் ராம்ஜி சால் வட்டாரங்களில் இருந்து தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

165 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் இன்று பதிவாகியுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 3081-ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் 3,000 கொரோனா பாதிப்புகளை தாண்டிய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. புதிய கொரோனா வழக்குகளில் மும்பை நகரத்திலிருந்து 107 பேரும், புனேவிலிருந்து 19 பேரும் பதிவாகியுள்ளனர்.

தவிர, நாக்பூரிலிருந்து 11 புதிய வழக்குகள், தானேவிலிருந்து 13, பிம்ப்ரி-சின்ச்வாட் (புனே) மற்றும் மாலேகான் (நாசிக்) ஆகிய இடங்களில் இருந்து தலா நான்கு, நவி மும்பை மற்றும் வசாய்-விரார் (பால்கர்) ஆகிய இடங்களில் இருந்து தலா இரண்டு வழக்குகள் மற்றும் அகமதுநகர், சந்திரபூர் மற்றும் பன்வெல் (ராய்காட்) பகுதிகளில் ஒன்று என கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் 987 ஆக உள்ளன. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 295 பேர் மீண்டு 187 பேர் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைத்த தரவுகளின்படி, கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை நாட்டில் 414 பேர் இறந்துள்ளனர். இதில் 187 இறப்புகளுடன் நாட்டிலேயே மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.