மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு!

 

மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பையில் அமைந்துள்ள தாராவி.வெறும் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவியில் தமிழர்கள் உட்பட சுமார் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கொரோனா தாக்கினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பையில் அமைந்துள்ள தாராவி.வெறும் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவியில் தமிழர்கள் உட்பட சுமார் 15 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கொரோனா தாக்கினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். எது நடக்க கூடாது என அனைவரும் நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. இந்த ஆட்கொல்லி வைரஸ் தாராவியிலும் நுழைந்துவிட்டது. 86க்கும் அதிகமானவர்கள் இங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் குறைந்தது 30 பேரிடமாவது தொடர்பில் இருக்கிறார், அந்த 30 பேர் மற்றவர்களிடம் தொடர்பில் உள்ளனர் எனவே இது போன்ற குடிசை பகுதியில் இவர்களை கண்டறிவதே பெரும்சவாலாக இருக்கிறது என்கின்றனர் மும்பை மாநகராட்சி அதிகாரிகள்.

ஏற்கனவே மும்பை நகரில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   மும்பைமுழுவதும், 381 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன இங்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தாராவில் மொத்தம் 9 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.